உங்கள் SIR படிவம் BLOவால் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறை
நீங்கள் கொடுத்த SIR படிவம், BLO (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) அவரது மொபைல் செயலியில் (Mobile app) சமர்பித்து (submit) செய்துவிட்டாரா என்று பார்க்க, இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்: voters.eci.gov.in/login
1. அங்கு "Fill Enumeration Form" பகுதிக்குச் செல்லுங்கள்.
2. உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுங்கள்.
3. உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC number) அங்கே டைப் (type) செய்யுங்கள்.
நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு (submitted) இருந்தால், "Submitted" என்று காட்டும்.
அப்படி வராமல், தொடர்ந்து "ஆதார் படிவத்தை Submit செய்யவும்" என்று காட்டினால், BLO உங்கள் படிவத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று அர்த்தம்.
உடனே உங்கள் BLO-வைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment
Hi Friends,
Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!
Thank You.
By - TrbTnpsc. Team