டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்றும் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நவ.2-ம் தேதி முதல் நடக்கவுள்ளது. 2026-ம் ஆண்டு்க்கான போட்டித் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான பாடத்திட்டங்களின்படி தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்த அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது.
திறமைமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. மேலும் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் இந்த பயிற்சி வகுப்புகளை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசு பணிகளில் இணைந்துள்ளனர்.
இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம். சென்னை-1 பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து (கச்சாலீஸ்வரர் ஆலயம்) அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் அமைந்துள்ள இக்கல்வி மையத்தில் நவ.2. முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.
வாரம்தோறும் சனி மற்றுமஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்புகள் நடைபெறும். ஆர்வமுள்ள தேர்வர்கள் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் முகவரி ஆதார நகலுடன் வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 97906 10961, 97912 85693, 73387 03324, 90426 92613, 90427 27276, 94446 41712 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
Hi Friends,
Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!
Thank You.
By - TrbTnpsc. Team