2025 ஆம் ஆண்டிற்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்
நிலை 1 / கணினி பயிற்றுநர் நிலை -1 1996 காலிப் பணியிடங்கள் நேரடி நியமன
அறிவிக்கை ( Notification ) எண் .02.2025 ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
10.07.2025 அன்று வெளியிடப்பட்டது . அறிவிக்கையின்படி 12.10.2025 அன்று
தேர்வுகள் நடத்தப்பட்டது . இதனைத் தொடர்ந்து அறிவிக்கையின்படி இறுதி
விடைக்குறிப்பு , தேர்வு முடிவுகள் மற்றும் 1 : 1.25 விகிதாச்சாரப்படி
மதிப்பெண் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான
பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது
. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் , சான்றிதழ் சரிபார்ப்பில்
கலந்து கொள்ளும் பணிநாடுநர்களுக்கான வழிமுறைகள் , ஆளறிச் சான்றிதழ் படிவம்
மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது .
அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக
பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம்
மற்றும் தேதி ஆகியவை சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது . சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டவாறு தங்களது அனைத்து ( i ) அசல் சான்றிதழ்கள் மற்றும் பிற
ஆவணங்களுடன் ( ii ) அதனுடைய Self Attested Copies , ( iii ) ஆளறிச்
சான்றிதழ் , ( iv ) சுயவிவரப் படிவம் மற்றும் ( v ) Candidate Declaration
ஆகியவற்றினை இரு நகல்களில் ( Two Copies ) சான்றிதழ் சரிபார்ப்பின்போது
கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கு
குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள்
தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் , அடுத்தக்கட்ட பணித் தெரிவிற்கு
பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ்
சரிபார்ப்பு பட்டியல் தொடர்பான கோரிக்கைகளை trbgrievances@tn.gov.in என்ற
ஆசிரியர் தேர்வு வாரிய மின்னஞ்சல் முகவரிக்கு பட்டியல் வெளியிடப்பட்ட நாள்
முதல் மூன்று தினங்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது . கோரிக்கை
மனுக்கள் பிற வழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படமாட்டாது எனத்
தெரிவிக்கப்படுகிறது .
PG TRB - LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION AND FINAL ANSWER KEY - Download here
No comments:
Post a Comment
Hi Friends,
Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!
Thank You.
By - TrbTnpsc. Team